2021ல் 'அடுக்கிய' வாக்குறுதிகள்: தி.மு.க.வுக்கு நினைவு இருக்குதா!
2021ல் 'அடுக்கிய' வாக்குறுதிகள்: தி.மு.க.வுக்கு நினைவு இருக்குதா!
ADDED : மார் 31, 2026 06:32 PM
கோவை: 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில், தி.மு.க. சார்பில் கோவை மாவட்டத்துக்கென 40க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் பிரத்யேகமாக தெரிவிக்கப்பட்டன.
அவை:
* கோவையில் பம்பு செட் சோதனை ஆய்வகம் அமைக்கப்படும்.
* காந்திபுரம் -- உக்கடம் சந்திப்பு மேம்பாலம் கட்டப்படும்.
* ஒண்டிப்புதுார் முதல் சுங்கச்சாவடி வரையும், சூலுாரிலும் பறக்கும் மேம்பாலம் கட்டப்படும்.
* மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* கிணத்துக்கடவு, ஆலாந்துறை, தொண்டாமுத்துாரில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
* பாலக்கோடு ரயில்வே கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை, சேலம் கோட்டத்தில் இணைக்க முயற்சிக்கப்படும்.
* பவானி ஆற்றில் இருந்து உபரிநீர் சின்னவேடம்பட்டி ஏரிக்குக் கொண்டு வரப்படும்.
* விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்.
* கோவை மாநகராட்சி நிர்வாகம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மாநகராட்சியே மக்களுக்கு குடிநீர் வழங்கும்.
* காந்திபுரம், உக்கடம், பீளமேடு, திருச்சி ரோடு அரசு மருத்துவமனை, சிங்காநல்லுார், ஹோப் கல்லுாரி, கோவை ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும்.
* கோவையில் டைடல் பார்க் இரண்டாம் நிலைத்திட்டம் துவக்கப்படும்.
* கோவை அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும்.
* ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
* கோவை, பொள்ளாச்சியில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
* தேசிய ஜவுளி ஆலை மீண்டும் லாபகரமாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
* தொண்டாமுத்துார், ஆனைமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, சூலுாரில் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி துவக்கப்படும்.
* சிங்காநல்லுார், ஆனைமலையில் அரசு மருத்துவமனைகள் கட்டப்படும்.
* பி.ஏ.பி. கால்வாயில் இருந்து கொத்தவாடி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வரப்படும்.
* பொள்ளாச்சியில் கயிறு திரிப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* ஆனைமலையில் கால்நடை மருத்துவமனை துவக்கப்படும்.
* நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, பவானி ஆறு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சிங்காநல்லுார் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, நீலிக்கோணாம் பாளையம், பீளமேடு தண்ணீர் பந்தல், ரயில்வே உயர்மட்ட மேம்பாலங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மேம்பாலங்கள் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
* சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகே வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சிதிலம் அடைந்துள்ள 960 வீடுகள் புதுப்பித்துக் கட்டப்படும்.
* மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து குடிநீர் திட்டங்களும் விழாமரத்தூருக்கு மாற்றி, சாக்கடை நீர் இல்லாமல் குடிநீர் வழங்கப்படும்.
* ஆனைமலை - நல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்.
* வால்பாறையில் பெய்யும் மழைநீர் கேரளாவுக்குச் செல்லாமல் தடுத்து, எடமலை நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்; ஒரு லட்சம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதி பெற வழிவகுக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டன. இதேபோல், 2024 லோக்சபா தேர்தலின்போதும் கோவைக்கு என்னென்ன செய்வோம் என பிரத்யேகமாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இவற்றில் சில மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன. மற்றவை இன்னும் அறிவிப்பாகவே இருக்கின்றன.
