/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு இல்லையா மனசாட்சி?
/
அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு இல்லையா மனசாட்சி?
அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு இல்லையா மனசாட்சி?
அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு இல்லையா மனசாட்சி?
ADDED : டிச 04, 2025 06:03 AM

கோவை: அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில், நோயாளிகளை ஒரு துறையில் இருந்து மற்ற துறைக்கு மாற்றும் போதும், அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு மாற்றும்போதும், பரிசோதனைகளுக்கு ஸ்டிரெக்ச்சரில் அழைத்து செல்லும் போதும், நோயாளிகள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர். காரணம், மேடும் பள்ளமுமாக, ஜல்லிகள் நிறைந்து காணப்படும் மருத்துவமனை வளாகம்.
ஸ்டிரெக்ச்சர், சக்கர நாற்காலியை தள்ளிச்செல்லும் அலுவலர்களும்கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதுபோன்று நேற்று ஸ்கேன் பரிசோதனைக்கு, அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி ஒருவரின் ஆக்சிஜன் மாஸ்க், ஜல்லிக்கற்களில் ஏறி குதித்து குதித்துச் சென்ற ஸ்டிரெச்சரால், கழன்று, கழன்று விழுந்தது.
ஆக்சிஜன் சிலிண்டரை ஒருவர் இழுத்துக்கொண்டும், ஸ்டிரெக்ச்சரை இரண்டு பெண்கள் மற்றும் உடன் வந்த ஒரு உறவினர் இழுத்து சென்றும், முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டனர். ஒரே பாதையில் பொதுமக்கள், பல்வேறு வாகனங்கள், நோயாளிகள் செல்வதாலும் நெரிசல் மேலும் சிக்கல்களை அதிகரிக்கிறது.
இதுகுறித்து, டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''வளாகத்தில் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து, பொதுப்பணித்துறையிடம் தொடர்ந்து பேசிவருகிறேன். மூன்று மாதங்களில் முடிப்பதாக தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு மருத்துவமனை யில் சாலை வசதி மட்டுமின்றி, அத்துடன் கழிவு நீர் மேம்பாட்டு பணிகளும் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. எங்கு தோண்டினாலும் பல லைன்கள்; பல சிக்கல்கள் உள்ளதால், ஆட்கள் பொறுமையாக பணிகளை இறங்கி செய்யவேண்டியுள்ளது. பிப்., 15ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என்றார்.

