/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வருக்காக காத்திருக்கிறது நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
/
முதல்வருக்காக காத்திருக்கிறது நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
முதல்வருக்காக காத்திருக்கிறது நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
முதல்வருக்காக காத்திருக்கிறது நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : டிச 04, 2025 06:04 AM

சூலூர்: சூலூர் ஸ்டேஷன் எல்லையை பிரித்து, நீலம்பூரை தலைமையிடமாக கொண்டு, புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்படும், என, முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்., மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார். 4.80 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கான எல்லைகள் முடிவு செய்யப்பட்டன. சூலூர் ஸ்டேஷனுக்கு உட்பட்ட நீலம்பூர், அரசூர், முத்துக்கவுண்டன் புதூர், ராசிபாளையம், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள வெள் ளானைப்பட்டி ஊராட்சி, அன்னூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட நாரணாபுரம், பச்சாபாளையம் ஊராட்சிகள் புதிய ஸ்டேஷனுக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ.,க்கள், 40 போலீசாரும் நியமிக்கப்பட உள்ளனர். அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கோதிபாளையத்தில் மகளிர் கூட்டமைப்பு கட்டடத்தில் புதிய ஸ்டேஷன் திறக்க அனைத்து பணிகளும் நடந்து முடிந்து, 10 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் திறப்பு விழா நடக்கவில்லை.

