/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய்க்கடி, ரேபிஸ் தடுப்பூசி பணி: சுகாதார ஊழியருக்கு பயிற்சி தர அறிவுறுத்தல்
/
நாய்க்கடி, ரேபிஸ் தடுப்பூசி பணி: சுகாதார ஊழியருக்கு பயிற்சி தர அறிவுறுத்தல்
நாய்க்கடி, ரேபிஸ் தடுப்பூசி பணி: சுகாதார ஊழியருக்கு பயிற்சி தர அறிவுறுத்தல்
நாய்க்கடி, ரேபிஸ் தடுப்பூசி பணி: சுகாதார ஊழியருக்கு பயிற்சி தர அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 08:09 PM
- நமது நிருபர் -
நாய்க்கடி காயங்களை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், தடுப்பூசி விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்களை பின்பற்றி, மருந்தை பாதுகாப்பாக சேமிப்பது குறித்து, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் பொது சுகாதாரத்துறை பயிற்சி வழங்க உள்ளது.
ரேபிஸ் தடுப்பூசிகளை முறையான தட்பவெப்பநிலையில், உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி சேமித்து வைக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் போதும் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.
நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிக்கும் போது, காயங்களின் தன்மையை பொறுத்து,1 - 4 வரை மதிப்பிட்டு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்.
ஆழமான காயங்களுக்கு தடுப்பூசியுடன் சேர்த்து 'ஆர்.ஜ.ஜி., எனப்படும் ரேபிஸ் 'இம்யூனோ குளோபளின்' தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும். இதனை நாய் கடித்த முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்த வேண்டும்.
காலதாமதம் அல்லது, 'இம்யூனோ குளோபளின்' மட்டும் தனியே செலுத்தும் போது பலன் கிடைப்பதில்லை. தவிர ரேபிஸ்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு, உயிரிழப்பு வரை ஏற்படும் நிலை உருவாகிறது.
இதை தவிர்க்க, நாய்க்கடி காயங்களை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், தடுப்பூசி விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்களை பின்பற்றி, மருந்தை பாதுகாப்பாக சேமிப்பது குறித்தும், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் பொது சுகாதாரத்துறை பயிற்சி வழங்க உள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கேரளாவில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது; இருந்த போதும் அவர்கள் இறந்து விட்டனர். ஆய்வுகளில் தொற்று வாய்ப்புக்கு பிந்தைய சிகிச்சை நடைமுறைகளை, சரிவர பின்பற்றாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
அத்துடன் காயங்களை முறையாக கிருமி நாசினி கொண்டு துாய்மைப்படுத்தாமல் இருந்ததால், ரேபிஸ் தொற்று பரவி தெரிய வந்துள்ளது.
நாய் கடித்தவர்கள் தடுப்பூசியை தவற விட்டலோ, உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளா விட்டாலோ, பாதிப்பு ஏற்படும் என தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது.
அதே நேரம், அவர்களுக்கு பயிற்சி பெற்றவர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றி, காயத்தின் தன்மைக்கு ஏற்ப (நிலை 1 - 4) தடுப்பூசிகளை சரிவர செலுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.