/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவுட்டுக்காய்க்கு நாய் உயிரிழப்பு
/
அவுட்டுக்காய்க்கு நாய் உயிரிழப்பு
ADDED : ஜூலை 13, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : குப்பனூரில், குப்பைமேட்டில் இருந்த அவுட்டுக்காய் வெடித்து, நாய் உயிரிழந்தது.
குப்பனூர், தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் யுவராஜ்,34. இவர் தனது வீட்டில், நாய் வளர்த்து வருகிறார். தெற்கு தோட்டம் பகுதியில், சாலையோரத்தில், அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளோர் குப்பை கொட்டி வருகின்றனர். இந்நிலையில் யுவராஜ் வீட்டில் வளர்க்கும் நாய், நேற்றுமுன்தினம் இரவு, சாலையோரத்தில் உள்ள குப்பைமேட்டில் இருந்த அவுட்டுக்காயை கடித்துள்ளது. இதில், தலை சிதறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.