ADDED : அக் 27, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பீளமேடு, பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் மீனாட்சி, 49; விலங்குகள் நல அமைப்பு உறுப்பினர். இவரை, மசக்காளிபாளையத்தை சேர்ந்த அருண் என்பவர் தொடர்பு கொண்டு, அடையாளம் தெரியாத நபர் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தெருநாய்க்கு, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுள்ளதாக தெரிவித்தார்.
மற்றொரு விலங்குகள் நல அமைப்பு உறுப்பினர் பிரியாவுடன், அங்கு சென்று பார்த்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, நாய்க்கு விஷம் வைத்து கொன்றவரை தேடி வருகின்றனர்.

