ADDED : ஜன 24, 2026 05:05 AM
பெ.நா.பாளையம்: கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வடக்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி ரங்கநாதன் பேசுகையில், சோமையம்பாளையம், சின்ன தடாகம், பிளிச்சி, அசோகபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து விட்டது. இப்பகுதிகளில் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டும் கழிவுகளை தெருநாய்கள் உண்டு பழகிவிட்டன.
கழிவுகள் கிடைக்காத போது, அவை கால்நடைகளையும், மனிதர்களையும் கடிக்கின்றன. மாதந்தோறும் இறைச்சிக்கடை உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை பெற்று, இறைச்சிக் கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டும்.
''குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை கொட்டுவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
