தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘இ–டிக்கெட்’ முன்பதிவு விவரங்களை பகிராதீர்

‘இ–டிக்கெட்’ முன்பதிவு விவரங்களை பகிராதீர்

‘இ–டிக்கெட்’ முன்பதிவு விவரங்களை பகிராதீர்


UPDATED : அக் 12, 2026 09:41 PM

ADDED : அக் 12, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:41 PM ADDED : அக் 12, 2026 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(ஐ.ஆர்.சி.டி.சி.) www.irctc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.

சில சமயங்களில் ரயில்கள் ரத்து போன்ற காரணங்களால் இ–டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது. தானியங்கி முறையில் இ–டிக்கெட் ரத்து நடைமுறை உள்ளது. பணத்தைத் திரும்ப பெறுவதில் மனித செயல்பாடுகள் எதுவும் இல்லை.

இதுகுறித்த விவரம் தெரியாதவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. பெயருடைய போலி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங், ரத்து விவரங்களை பகிரும்போது முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, சமூக வலைதளங்களில் டிக்கெட் முன்பதிவு, ரத்து விவரங்களைப் பகிர வேண்டாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தியுள்ளது.

‘பேரிடர் போன்ற காரணங்களால் ரயில்கள் ரத்தாகின்றன. பல காரணங்களால் பயணிகள் டிக்கெட் ரத்து செய்கின்றனர். அனுபவம், விழிப்புணர்வு இல்லாத பயணிகள் டிக்கெட் முன்பதிவு விவரங்களை சம்பந்தமில்லாத இணையதளத்தில் பகிரும்போது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெற்று, மோசடி பேர்வழிகள் பணத்தை அபகரிக்கின்றனர். எனவே, பயணிகள் உஷாராக இருக்க வேண்டும்’ என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us