UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
கோவை: ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் கோவையில் இருந்து காசிக்கு நவ., 21ம் தேதி சிறப்பு சுற்றுலா விமானம் இயக்கப்படுகிறது.
காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காசி விசாலாட்சி, கால பைரவர் ஆலயம், சாரநாத், கங்கா ஆர்த்தி, அலகாபாத் திரிவேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட இடங்களை காணலாம்.
5 நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு ரூ.38,350 கட்டணம். இதில், விமான கட்டணம், தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவை அடங்கும். விவரங்களுக்கு, 90031 40655, 82879 32064 ஆகிய எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
