ADDED : ஜூலை 06, 2026 06:08 AM

அ நிறம் | அளவு
கோவை: கவுண்டம்பாளையம், டி.வி.எஸ்.நகர் ரோடு, கோ-ஆப்டெக்ஸ் காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 75. 1ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கருவிழிகள், அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டன.
கோபாலகிருஷ்ணனின் உடலுக்கு, நேற்றுமருத்துவமனை 'டீன்' கீதாஞ்சலி, மருத்துவர்கள், நர்ஸ்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
