/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழுதை பால் வேணுங்களா: 50 மி., விலை ரூ.200 தானுங்க!
/
கழுதை பால் வேணுங்களா: 50 மி., விலை ரூ.200 தானுங்க!
கழுதை பால் வேணுங்களா: 50 மி., விலை ரூ.200 தானுங்க!
கழுதை பால் வேணுங்களா: 50 மி., விலை ரூ.200 தானுங்க!
ADDED : செப் 23, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : அன்னுாரில் வீதி, வீதியாக, கூவி, கூவி, கழுதை பால் விற்பனை செய்யப்பட்டது.
அன்னுாரில், கோவை ரோடு, அவிநாசி ரோடு, தர்மர் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரண்டு கழுதைகளை அழைத்து வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நபர், கழுதை பால் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை வராது, குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமியருக்கு ஏற்றது என்று கூவி, கூவி விற்பனை செய்தார். 50 மில்லி கழுதை பால் 200 ரூபாய் என விற்கப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தனர்.