/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தக்காளி காய்ச்சல் வேண்டாம் அச்சம்'
/
'தக்காளி காய்ச்சல் வேண்டாம் அச்சம்'
ADDED : ஏப் 19, 2025 11:54 PM
கோவை: கேரளாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு, தமிழகத்திலும் ஆங்காங்கே பதிவாகிவருகிறது.
கை, பாதம், வாய் போன்ற இடங்களில் சிவப்பு நிறத்தில் தடிப்பு, இக்காய்ச்சலால் ஏற்படுகிறது. காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை, வாய், நாக்கில் புண், கை , கால், முதுகுக்கு கீழ் கொப்பளங்கள் தோன்றுதல், தலைவலி போன்றவை அறிகுறிகள்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''கோவையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பொள்ளாச்சியில் இக்காய்ச்சல் பதிவானது. வேறு பாதிப்புகள் ஏதும் இல்லை. தக்காளி காய்ச்சல் தாமாக மூன்று, நான்கு நாட்களில் சரியாகிவிடும். இப்பாதிப்பு குறித்து, பதட்டம், அச்சம் கொள்ளத்தேவையில்லை,'' என்றார்.

