sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கடைகளில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள்... அஞ்ச வேண்டாம் பெயர், முகவரியை பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்தல்

 கடைகளில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள்... அஞ்ச வேண்டாம் பெயர், முகவரியை பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்தல்

 கடைகளில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள்... அஞ்ச வேண்டாம் பெயர், முகவரியை பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்தல்


ADDED : ஜன 30, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: வட மாநில தொழிலாளர்கள் பெயர், முகவரி போன்ற விவரங்களை உரிமையாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் வலியுறுத்தி யுள்ளார்.

ஓரிரு இடங்களில் நடக்கும் சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு பரவுவதை கண்டு, புலம்பெயர் தொழிலாளர்கள் அஞ்ச வேண்டாம்; அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், விவசாய பணிகளில் 8 லட்சம் பேருக்கு மேல் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களின் விவரங்கள், தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கட்டட தொழில், விவசாய கூலிகள், சிறிய ஓட்டல்கள், கடைகள் போன்ற அமைப்பு சாரா துறையில் வேலை செய்வோர் விவரங்கள் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள் அவர்களது விவரங்களை தொழிலாளர் நலத்துறை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் நமது நிருபரிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்தாலும், இதுவரை 1.40 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அலட்சியம், பயம், அடிக்கடி ஆட்கள் மாறுவது என பல காரணங்கள் இருக்கலாம். எனினும், அரசுத்துறைகள் இணைந்து செயல்படுவதற்கு அந்த விவரங்கள் அவசியம். இதற்காக முகாம்கள் நடத்தியும் பதிவு செய்கிறோம்.

சென்னையில் புலம்பெயர் தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை என குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிலர் பெரிதுபடுத்தி பரப்புவதால் அநாவசிய பீதி ஏற்படலாம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அஞ்ச தேவையில்லை. அத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் துறையுடன் இணைந்து தொழிலாளர் நலத்துறை செயல்படும்.

இவ்வாறு சுபாஷ் சந்திரன் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். ''புலம் பெயர் தொழிலாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

பொது இடங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட் காக்கிஸ் வாயிலாக ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். யாருக்காவது ஆபத்து என்றால், நம்பர் 100க்கு போன் செய்தால் உடனே விரைந்து வருவோம், என்று மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்னக்கா மணன் கூறினார்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us