/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சியுடன் இணைக்காதீங்க! பணிக்கம்பட்டி மக்கள் மனு
/
நகராட்சியுடன் இணைக்காதீங்க! பணிக்கம்பட்டி மக்கள் மனு
நகராட்சியுடன் இணைக்காதீங்க! பணிக்கம்பட்டி மக்கள் மனு
நகராட்சியுடன் இணைக்காதீங்க! பணிக்கம்பட்டி மக்கள் மனு
ADDED : பிப் 07, 2025 09:32 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்க வேண்டாம், என, பணிக்கம்பட்டி கிராம மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டசூராம்பாளையம் (பணிக்கம்பட்டி) ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிக்கம்பட்டி ஊராட்சியானது சிறு கிராமமாகவே இருக்கிறது. பெரும்பாலான மக்கள், விவசாய கூலிகளாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளாகவும் உள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும் பட்சத்தில், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடந்தாண்டு, அக்., 2ம் தேதி கடந்த மாதம், 26ம் தேதிகளில், ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டங்களில், நகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ஊராட்சியில் குறைந்த வரியினங்கள் செலுத்தப்படுகிறது. நகராட்சியுடன் சேர்த்தால், வரியினங்கள் அதிகமாகும். எனவே, ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்க வேண்டாம். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.