/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நலத்திட்டங்கள் வழங்குவதில் ... தாமதம் வேண்டாம்!:தாசில்தார்களுக்கு கலெக்டர் உத்தரவு

ADDED : ஜன 12, 2026 05:25 AM

கோவை:தேர்தலுக்கு முன் பட்டா உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும், மக்களை சென்று சேருவதில் தாமதமோ, குழப்பமோ இருக்கக் கூடாது; பணிகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று, கோவையில் உள்ள 11 தாலுகா தாசில்தார்களுக்கு, கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களில் பட்டா மாறுதல் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
ஒருமுறை கொடுத்த விண்ணப்பம், அடுத்த முறை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. தீர்வு காணப்படாததே காரணம்.
இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள் நிலையில் பல்வேறு காரணங்களை சொல்கின்றனர். போதுமான ஆவணங்கள் இணைக்கவில்லை என்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் ஆய்வு என பல நாட்கள் கடந்தும் பட்டா வழங்குவதில்லை.
திங்கள் தோறும் வரும் பட்டா மாறுதல் மனுக்களை குறைக்க, மாவட்ட நிர்வாகம் விரைவாக பட்டா மாறுதலை வழங்க வேண்டும்.
நலத்திட்டங்களையும், வளர்ச்சிப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று, அனைத்து தாசில்தார்களுக்கும் கலெக்டர் பவன்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.