/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்காதீங்க!
/
வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்காதீங்க!
ADDED : மே 29, 2025 11:19 PM
வால்பாறை, ;வால்பாறை சுற்றுலா வருவோர், குரங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், வனவிலங்குகள் அதிகம் உள்ளன. வால்பாறைக்கு சுற்றுலா வருவோர், சாலையோரம் விளையாடும் குரங்குகளுக்கு திண்பண்டங்களை வழங்குகின்றனர். பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொட்டலங்களை வழங்கும் போது, அதை உட்கொள்ளும் குரங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி, குரங்குகளுக்கு திண்பண்டங்களை வழங்குகின்றனர். இதனால் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா வரும் பயணியர் மலைப்பாதையில் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். குரங்குகளுக்கு உணவு கொடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.