/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பயோ காஸ் பிளான்ட்'க்கு அனுமதி தராதீங்க; மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோரிக்கை

ADDED : ஜன 14, 2025 06:45 AM
கோவை; 'வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், 'பயோ காஸ் பிளான்ட்' அமைக்கும் திட்டத்துக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது' என, குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு கூட்டுக்குழு சார்பில் மோகன் அனுப்பியுள்ள கடிதம்:
வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், 'பயோ காஸ் பிளான்ட்' அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டம் வகுத்திருக்கிறது. 2018ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், 'குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும். திடக்கழிவு மேலாண்மை பணிக்கு வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் மதிக்காமல், இப்பகுதி மக்களை சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாக்கியுள்ளனர். பசுமை தீர்ப்பாய தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கு நடந்து வருகிறது.
இறுதி தீர்ப்பு வரும் வரை, வெள்ளலுார் குப்பை கிடங்கில் புதிதாக எந்த திட்டமும் செயல்படுத்த, கோவை மாநகராட்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது.
மாசுக்கட்டுப்பாடு வாரியம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, குறிச்சி மற்றும் வெள்ளலுார் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.