/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெய்வநாயகி நகருக்கு தப்பித்தவறி போயிறாதீங்க! போனால் 'கடி' வாங்க வேண்டியதுதான்!
/
தெய்வநாயகி நகருக்கு தப்பித்தவறி போயிறாதீங்க! போனால் 'கடி' வாங்க வேண்டியதுதான்!
தெய்வநாயகி நகருக்கு தப்பித்தவறி போயிறாதீங்க! போனால் 'கடி' வாங்க வேண்டியதுதான்!
தெய்வநாயகி நகருக்கு தப்பித்தவறி போயிறாதீங்க! போனால் 'கடி' வாங்க வேண்டியதுதான்!
ADDED : ஜன 30, 2024 12:25 AM

குப்பை தேக்கம்
புலியகுளம், அனுக்கிரகா கார்டன்ஸ், ஆனந்தாஸ் ஓட்டல் அருகே, குப்பை கொட்டக் கூடாது என்ற மாநகராட்சி அறிவிப்பையும் மீறி, சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். பல வாரங்களாக தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தர், புலியகுளம்.
வீணாகும் குடிநீர்
சரவணம்பட்டி, 30வது வார்டு, விநாயகபுரம், பாரதியார் வீதியில், புற்றுக்கண் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே, அத்திக்கடவு குடிநீர் குழாய் உடைந்துள்ளது. பெருமளவு குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.
- வேலவன், சரவணம்பட்டி.
நடைபாதையில் நடக்க முடியலை
அவிநாசி ரோடு, 83வது வார்டு, அண்ணாதுரை சிலை அருகே, நடைபாதையோரம் அடர்த்தியாக புதர் வளர்ந்துள்ளது. பாதை முழுவதும் கேபிள் ஒயர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- பாலகிருஷ்ணன், 83வது வார்டு.
நிரம்பி வழியும்சாக்கடை
ஆவாரம்பாளையம், காமராஜ் நகர், ஆறாவது வீதியில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. சாக்கடையில் விளிம்பு வரை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சஞ்சய், ஆவாரம்பாளையம்.
மணலில் சறுக்கும் வாகனங்கள்
வெள்ளலுார் - சிங்காநல்லுார் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் அதிகளவில் மணல் குவிந்துள்ளது. பைக்கில் செல்வோர் மணலில் சறுக்கி விழுகின்றனர். மேம்பாலத்திலுள்ள கம்பங்களில் மின்விளக்குகளும் எரிவதில்லை.
- நாராயணன், காவேரி நகர்.
குழியில் விழும் வாகனங்கள்
தொண்டாமுத்துார், போளுவாம்பட்டி ரோடு, 56வது வார்டு, பழநியப்பா மாவு மில் எதிரில், தண்ணீர் திறப்பு வால்வு குழி, சிலேப் இன்றி உள்ளது. இருசக்கர வாகனங்கள், பைக்குகள் அடிக்கடி குழியில் விழுந்து விபத்திற்குள்ளாகின்றன.
- சண்முகம், தொண்டாமுத்துார்.
தெருநாய்களால் தொல்லை
கணபதி, 31வது வார்டு, தெய்வநாயகி நகரில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றுகின்றன. இரவு நேரங்களில் பைக்கில் செல்வோரை துரத்தி, கீழே விழவைக்கின்றன. சாலையில் நடந்து செல்வோரையும் குரைத்து அச்சுறுத்துகின்றன.
- மது, கணபதி.
சாக்கடை அடைப்புமக்கள் அவதி
மாதம்பட்டி, ஜி.வி.கார்டன் முதல், மாதம்பட்டி துணை மின்நிலையம் வரை, சாக்கடை கால்வாய் பல மாதங்களாக துார்வாராமல் உள்ளது. குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசு புழுக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது.
- நடராஜன்,
மாதம்பட்டி.
போக்குவரத்திற்கு இடையூறு
பீளமேடு, ஜி.ஆர்.ஜி., எம்.கே.பி., ரோடு, 52வது வார்டில், பல இடங்களில் பயன்படுத்தாத பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதால், அகற்ற வேண்டும்.
- ஆனந்த்குமார், பீளமேடு.
குழிகள் நிறைந்த சாலை
சுந்தராபுரம், போத்தனுார் மற்றும் பொள்ளாச்சி சந்திப்பு பகுதியில், சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.
- சக்திவேல்,
சுந்தராபுரம்.
புழுதி பறக்கும் சாலை
திருச்சி ரோடு, சிங்காநல்லுார் ரோட்டில் குழாய் பதிப்பிற்காக குழிகள் தோண்டி மூடப்பட்டன. தார் ஊற்றி மூடாமல், வெறும் மண் கொண்டு மூடப்பட்டது. வாகனங்கள் செல்லும்போது அதிக புழுதி பறக்கிறது.
- ஈஸ்வரி, சிங்காநல்லுார்.