/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயிரம் ரூபாய் இல்லையா! ஆதங்கத்தில் கார்டுதாரர்கள்
/
ஆயிரம் ரூபாய் இல்லையா! ஆதங்கத்தில் கார்டுதாரர்கள்
ADDED : ஜன 10, 2025 12:16 AM
அன்னுார்; அன்னுார் தாலுகாவில், 66 ஆயிரத்து 507 பேருக்கு, பொங்கல் பரிசு வினியோகம் நேற்று துவங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. கடந்த வாரம், அன்னுார் தாலுகாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து நேற்று பொங்கல் தொகுப்பு வினியோகம் துவக்கி வைக்கப்பட்டது. அன்னூர் கூட்டுறவு பண்டக சாலையில் நடந்த விழாவில், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் பொங்கல் பரிசு விநியோகத்தை துவக்கி வைத்தார்.
அதிகாரிகள் கூறுகையில், 'அன்னூர் தாலுகாவில், 66 ஆயிரத்து 507 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது' என்றனர்.
கடந்தாண்டு பொங்கல் பரிசுடன், ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வழங்காததால் ரேஷன் கார்டுதாரர்கள் பலர் ஏமாற்றத்துடன் சென்றனர். பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

