/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய் பரிசோதனைக்கு வர தயங்க வேண்டாம்; வீடு வீடாக சென்று மருத்துவ பணியாளர்கள் அழைப்பு
/
புற்றுநோய் பரிசோதனைக்கு வர தயங்க வேண்டாம்; வீடு வீடாக சென்று மருத்துவ பணியாளர்கள் அழைப்பு
புற்றுநோய் பரிசோதனைக்கு வர தயங்க வேண்டாம்; வீடு வீடாக சென்று மருத்துவ பணியாளர்கள் அழைப்பு
புற்றுநோய் பரிசோதனைக்கு வர தயங்க வேண்டாம்; வீடு வீடாக சென்று மருத்துவ பணியாளர்கள் அழைப்பு
ADDED : ஜூன் 26, 2025 11:05 PM
கோவை; கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மூன்று வகையான புற்றுநோய்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பொதுமக்களை வரவழைப்பதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், 3 வகையான புற்றுநோய்களுக்கு ஒருங்கிணைந்த பரிசோதனை திட்டம், கோவை உட்பட 12 மாவட்டங்களில், கடந்த மே 9ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவையில், மே 12ம் தேதி முதல் கிராமப்புற நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மையங்களில், இதற்கான பரிசோதனை செய்யப்படுகிறது
மாவட்டத்தில், 504 சுகாதார தன்னார்வலர்கள் வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அழைப்பு விடுக்கின்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், வாய் புற்றுநோய் பரிசோதனையும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனையும் செய்து கொள்ள தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டாலும்; பொதுமக்கள் பரிசோதனைக்கு வர தயங்குவதாக தெரிகிறது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சுமதியிடம் கேட்டபோது, ''புற்றுநோய் பரிசோதனைக்கு வந்தால், ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் சிலருக்கு இருக்கலாம். இது சாதாரண பரிசோதனை. மக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் கண்டறிந்தால், 100 சதவீதம் குணப்படுத்த இயலும். பாதிப்பு இருப்பது கண்டறிந்தால், சிகிச்சை அளிப்பது முதல் அனைத்தும் இத்திட்டத்தில் கண்காணிக்கப்படுகிறது. 'கூல் லீப்' போன்ற போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு, வாய் புற்றுநோய் ஏற்படுவதை காணமுடிகிறது. இளைஞர்கள் இதுபோன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், '' பரிசோதனை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். களப்பணியாளர்கள் பொதுமக்களை அழைத்து வருகின்றனர்,'' என்றார்.