/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உப்பில் ஏதோ கருப்புத்துகள் என்று ஒதுக்காதீங்க... அது, இரும்புச்சத்து; சொல்கிறது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,
/
உப்பில் ஏதோ கருப்புத்துகள் என்று ஒதுக்காதீங்க... அது, இரும்புச்சத்து; சொல்கிறது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,
உப்பில் ஏதோ கருப்புத்துகள் என்று ஒதுக்காதீங்க... அது, இரும்புச்சத்து; சொல்கிறது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,
உப்பில் ஏதோ கருப்புத்துகள் என்று ஒதுக்காதீங்க... அது, இரும்புச்சத்து; சொல்கிறது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,
ADDED : ஆக 27, 2025 10:48 PM
கோவை; அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய உணவு தர நிர்ணயம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) அறிவுறுத்தல்படி, மக்கள் அதிகம் பயன்படுத்தும் உப்பில், அயோடின் கலந்து வினியோகிக்கப்படுகிறது.
அதேபோல், ரத்தசோகை, வளர் இளம்பெண்களுக்கு ஏற்படும் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை சரிசெய்ய, உப்பில் இரும்பு சத்து கலந்து விற்பனை செய்ய, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவுறுத்தியுள்ளது.
இரும்பு சத்து கலக்கப்பட்டு வரும் உப்பில், கருப்பு நிறத்தில் துகள்கள் இருக்கலாம் என்பதால், பொதுமக்கள் அதை குப்பை என, நினைத்து ஒதுக்கி விடுகின்றனர்.
ஒதுக்காமல் சமையலில் சேர்க்க வேண்டியது அவசியம் என்கிறார், கோவை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா.
அவர் கூறியதாவது:
தைராய்டு சுரப்பி குறை உள்ளிட்ட, பல்வேறு குறைபாடுகளை சரிசெய்ய, உப்பில் அயோடின் சேர்த்து கொடுக்கப்பட்டது. இரும்புச்சத்து குறைபாட்டால் வரும், ஆரோக்கிய பிரச்னைகளை குறைக்க, உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., ஆய்வு செய்து, உப்பில் அயோடின் கலக்க அறிவுறுத்தியுள்ளது. அயோடின் போல், இரும்புச்சத்து கலப்பது கட்டாயம் ஆக்கப்படவில்லை.
பல உற்பத்தியாளர்கள் உப்பில், அயோடின், இரும்புச்சத்து இரண்டையும் கலந்து விற்பனை செய்கின்றனர். இதை, 'டபுள் போர்ட்டிபைடு சால்ட்' என்று கூறு வோம். இதுகுறித்த அறிவுறுத்தல் 2018ல் வெளியானது. கொரோனா பாதிப்பு காரணமாக, இதில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போனது; தற்போது உப்பு உற்பத்தியாளர்களை அழைத்து, இது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. உப்பில் இரும்புச்சத்து, துகள்களாக சேர்க்கப்படுகிறது.
கருப்பாக இருக்கிறதென ஒதுக்கக் கூடாது. 'பிளஸ் எப்.,' குறியீடு இருக்கும் உப்பை பயன்படுத்துவது சிறந்தது. அதில், அயோடின், இரும்புச்சத்து இரண்டும் இருக்கும்.
இவ்வாறு, அனுராதா கூறினார்.