தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மனை உறுதியாகாமல் தவணை திட்டத்தில் சேர வேண்டாம்

மனை உறுதியாகாமல் தவணை திட்டத்தில் சேர வேண்டாம்

மனை உறுதியாகாமல் தவணை திட்டத்தில் சேர வேண்டாம்


ADDED : மார் 09, 2024 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 08:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த வணை முறையில் பணம் செலுத்தி மனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள் போன்று மனை வாங்கிக்கொண்டு தவணை செலுத்தினால் பிரச்னை இல்லை. ஆனால், சில நிறுவனங்கள், மாதம், 5,000 ரூபாய், 10,000 ரூபாய் என வசூலித்து கொள்கின்றன.

ஐந்து ஆண்டுகள் வசூலுக்கு பின் தான் மனை உங்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படும் என்று ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றன.

பொது மக்களும், இத்திட்டத்தின் அபாயம் தெரியாமல் தவணை செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறு தவணை செலுத்திய பின் இறுதியில் நிறுவனம், உங்களுக்கு எத்தகைய மனையை கொடுக்கும் என்பது தெரியாது. சில நிறுவனங்கள், இதில் விற்காத மனைகளை தவணை முறையில் வருவோருக்கு ஒதுக்குகின்றன.

இதுபோன்று பல்வேறு சிக்கல்களை தவிர்க்க சில வழிமுறைகளை ஆரம்பத்திலேயே கடைபிடிக்க வேண்டும். தவணை திட்டத்தில் சேரும் முன் எங்களுக்கான மனை எது என்பதை ஆவணத்தில் குறிப்பிடுமாறு கேட்க வேண்டும்.

தவணை துவங்கும் நிலையில் மனையின் மதிப்பு, தவணை முடியும் நிலையில் மனையின் மதிப்பு இதில், எதன் அடிப்படையில் விலை முடிவு செய்யப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தவணையில் மனை வாங்குவோர், ஆம்பத்திலேயே விழிப்புடன் செயல்பட்டு சிக்கல்களை தவிர்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us