/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிக்கும் வயதில் சிந்தனையை சிதற விடாதீங்க! பிளஸ் 2 மாணவர்களுக்கு 'அட்வைஸ்'
/
படிக்கும் வயதில் சிந்தனையை சிதற விடாதீங்க! பிளஸ் 2 மாணவர்களுக்கு 'அட்வைஸ்'
படிக்கும் வயதில் சிந்தனையை சிதற விடாதீங்க! பிளஸ் 2 மாணவர்களுக்கு 'அட்வைஸ்'
படிக்கும் வயதில் சிந்தனையை சிதற விடாதீங்க! பிளஸ் 2 மாணவர்களுக்கு 'அட்வைஸ்'
ADDED : ஜன 19, 2024 11:39 PM

வால்பாறை:படிக்கும் வயதில் மாணவர்கள் சிந்தனையை சிதறவிடக்கூடாது என்று, கல்லுாரியில் நடந்த உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான களப்பயணம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி உதவி பேராசிரியர் அரவிந்த் வரவேற்றார்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசியதாவது:
வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், 9 பாடப்பிரிவுகள் உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின், விரும்பிய பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.
கல்லுாரியில் அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு கல்லுாரியில் படித்தால் வேலைவாய்ப்பு அதிகளவில் தேடி வரும். படிக்கும் வயதில் மாணவர்கள் சிந்தனையை சிதறவிடாமல், நல்ல முறையில் படித்து வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பேசுகையில், ''மாணவர்கள் உயர்கல்வி படிக்க வால்பாறையிலேயே அனைத்து வசதிகளும் உள்ளன. இங்குள்ள கல்லுாரியில் சேர்ந்து, விரும்பிய பாடப்பிரிவுகளில் படித்து, உயர்கல்வி கற்க வேண்டும்.
கல்வியோடு, ஒழுக்கம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். மாணவ பருவத்தில் தேவையற்ற பழக்க வழக்கத்திற்கு ஆளாகி, வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்,'' என்றார்.
வால்பாறை, சோலையாறுடேம், அட்டகட்டி உள்ளிட்ட நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 109 மாணவ, மாணவியர் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் நன்றி கூறினார்.