sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உணவு பொட்டல லேபிளில் பொய் கூடாது :விவசாயிகளுக்கு எச்சரிக்கை

/

 உணவு பொட்டல லேபிளில் பொய் கூடாது :விவசாயிகளுக்கு எச்சரிக்கை

 உணவு பொட்டல லேபிளில் பொய் கூடாது :விவசாயிகளுக்கு எச்சரிக்கை

 உணவு பொட்டல லேபிளில் பொய் கூடாது :விவசாயிகளுக்கு எச்சரிக்கை

1


ADDED : டிச 18, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ;அப்பளம், வெல்லம் உள்ளிட்ட பொருட்களில் தேசிய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தடை செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தக்கூடாது என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா எச்சரித்துள்ளார்.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கோவை மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில், அரிசி, எண்ணெய், மளிகை பொருட்கள் உள்ளிட்ட, ஆறு பிரிவு களின் கீழ் செயல்படும் சங்க வியாபாரிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம், நேற்று ராஜவீதியில் உள்ள ராமன் கோவில் மண்டபத்தில் நடந்தது.

இதில், உணவு பாதுகாப்புத்துறை விதிமுறைகள் குறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உணவு கையாளும் முறை, பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்த, பாஸ்டேக் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:

மளிகை வியாபாரிகள், உணவு பாதுகாப்பு தர சட்டங்களை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்களை பயன்படுத்தக்கூடாது.

வியாபார தலத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட நிறமிகளுடன் பஞ்சுமிட்டாய், வெல்லம், அப்பளம் போன்றவை விற்பனை செய்யக் கூடாது.

பரிசோதனையில் அவ்வாறு விற்பது தெரிந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மசாலா பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை, பொட்டலமிடாமல் விற்கக்கூடாது.

எந்த பொருளாக இருந்தாலும், 100 சதவீதம் இயற்கை, துாய்மை என்ற தவறான வழிகாட்டுதல் வார்த்தைகளை, லேபிளில் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், எப்.எஸ்.ஓ., காமராஜ், கோவை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் உட்பட, 80 வியாபாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us