/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சார்டிங்' அலுவலகத்தை கோவைக்கு மாற்றாதீங்க!
/
'சார்டிங்' அலுவலகத்தை கோவைக்கு மாற்றாதீங்க!
ADDED : நவ 29, 2024 12:22 AM
பொள்ளாச்சி; போஸ்டல் 'சார்டிங்' அலுவலகத்தை கோவைக்கு மாற்றம் செய்யக் கூடாது என, பொள்ளாச்சி, ரயில்வே மெயில் சர்வீஸ் ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி, ரயில்வே மெயில் சர்வீஸ் ஊழியர் சங்கம் வாயிலாக, தபால்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பொள்ளாச்சி 'சார்டிங்' அலுவலகத்தை மூடக்கூடாது என, வலியுறுத்தினர்.
இது குறித்து, சங்கத்தினர் கூறியதாவது:
வரும் டிச., 7ம் தேதி முதல், விரைவு மற்றும் பதிவு தபால்கள் ஒரே சேவையின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. இதனால், பொள்ளாச்சி 'சார்டிங்' அலுவலகம், கோவை அலுவலகத்துடன் இணைக்கப்படுகிறது.
அவ்வாறு, இணைக்கப்பட்டால், பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை மற்றும் கிணத்துகடவு பகுதிகளுக்கு வரும் அனைத்து தபால்களும், கோவையில் இருந்து பிரித்து அனுப்பப்படும். இந்த தபால்கள், பொதுமளுக்கு ஒரு நாள் தாமதாக கிடைக்கும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வக்கீல்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் பாதிப்படைவர். எனவே, எப்போதும் போன்று, பொள்ளாச்சியிலேயே 'சார்டிங்' அலுவலகம் செயல்படுத்தவும், விரைவு தபால் மற்றும் பார்சல் பிரிவும் பொள்ளாச்சி 'சார்டிங்' அலுவலகத்திலேயே பிரித்து மக்களைச் சென்றடையும் வகையில் தபால் சேவை இருத்தல் வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.