/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கண்களை பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம்'
/
'கண்களை பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம்'
ADDED : ஜன 20, 2026 05:14 AM

கோவை: கண்களை பாதுகாக்கும் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் என்று, கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பிரதீபா அறிவுரை வழங்கினார்.
தேசிய சாலைப்பாதுகாப்பு மாதத்தையொட்டி, கோவைப்புதுாரிலுள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
லைசென்ஸ் பெறவும், புதுப்பிக்கவும் வந்த டிரைவர்கள், பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 272 பேரில், 118 பேருக்கு பார்வையில் குறை இருந்தது.
அதில் 76 பேருக்கு உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது. மற்றவர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பிரதீபா கூறியதாவது:
வாகன ஓட்டிகள் கண்களை பரிசோதித்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். பலரும் கவனம் செலுத்துவதில்லை அதனால் கண்பரிசோதனை முகாமை நடத்தி இலவசமாக கண்ணாடி வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சையையும் இலவசமாக செய்ய அறிவுரை வழங்கப்படுகிறது. கண்களை பாதுகாக்கும் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

