/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பைகளுக்கு தீ வைக்கக்கூடாது; வனத்துறையினர் விழிப்புணர்வு
/
குப்பைகளுக்கு தீ வைக்கக்கூடாது; வனத்துறையினர் விழிப்புணர்வு
குப்பைகளுக்கு தீ வைக்கக்கூடாது; வனத்துறையினர் விழிப்புணர்வு
குப்பைகளுக்கு தீ வைக்கக்கூடாது; வனத்துறையினர் விழிப்புணர்வு
ADDED : பிப் 28, 2024 12:01 AM
மேட்டுப்பாளையம்;வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்கும் வகையில், கிராமங்களில் வனப்பகுதியோரம் குப்பைகளுக்கு தீ வைக்கக்கூடாது என சிறுமுகை வனத்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சிறுமுகை வனச்சரகத்தில் லிங்காபுரம், பெத்திக்குட்டை, கூத்தாமண்டி, மூலையூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவலிங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. தற்போது, கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதிகளில் உள்ள மரங்களின் இலைகள் காய்ந்து கீழே விழுகின்றன. குட்டைகள், ஓடைகள் போன்றவைகளிலும் தண்ணீர் குறைந்து வறண்டு வருகிறது.
தீ விபத்துகளை தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதே சமயம் தண்ணீர் தேடி ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராம மக்களுக்கு சிறுமுகை வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''வெயில் காரணமாக வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் கிராமங்களில் வனப்பகுதியோரம் குப்பைகளை, காய்ந்த செடிகளை சுத்தம் செய்து மக்கள் தீ வைக்கக்கூடாது. இதனால் வனத்துக்குள் தீ பரவ வாய்ப்புள்ளது. அதே போல் வனவிலங்குகள் வந்தால் வனத்துறைக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.----

