/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம்! சப் - கலெக்டரிடம் வேண்டுகோள்
/
சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம்! சப் - கலெக்டரிடம் வேண்டுகோள்
சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம்! சப் - கலெக்டரிடம் வேண்டுகோள்
சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம்! சப் - கலெக்டரிடம் வேண்டுகோள்
ADDED : அக் 14, 2024 09:26 PM

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.
* அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் வெள்ளை நிறக்கோடு வேகத்தடைகளில் வாகனங்கள் ஏறி இறங்கும் போது, அதிர்வு ஏற்பட்டு நடுவழியில், வாகனங்களில் பழுதாகி, விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு தோள்பட்டை வலி பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.
கோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. அது விவசாயிகள், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், சுங்க கட்டணம் வசூலிப்பது விதிமுறைகளுக்கு எதிராக அமையும். மேலும், விவசாயம், சிறு தொழில் செய்வோருக்கு கட்டணம் வசூலிக்கும்போது மிகவும் பாதிப்பு ஏற்படும். எனவே, சுங்கச்சாவடி அமைக்க கூடாது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கே.நாகூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'கஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.நாகூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட மக்கள், கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். இங்குள்ள, 50க்கும் மேற்பட்டோருக்கு வீடு இல்லாமல் வசிக்கின்றோம். எனவே, அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.

