தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கட்சி போஸ்டர்களை இன்னும் கிழிக்கலை

கட்சி போஸ்டர்களை இன்னும் கிழிக்கலை

கட்சி போஸ்டர்களை இன்னும் கிழிக்கலை


ADDED : மார் 18, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 08:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி 4 நாட்களாகியும், பல பகுதிகளில் கட்சிகளின் போஸ்டர்கள் கிழிக்கப்படவில்லை. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை. கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.

தேர்தல் தேதி, 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 72 மணி நேரத்துக்குள் சுவர் விளம்பரங்கள் அழிக்கவும், போஸ்டர்களை கிழிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மாநகராட்சி ஊழியர்கள் 2 நாள் அப்பணியை செய்தனர். அதன்பின் விட்டு விட்டனர். தடாகம் ரோட்டில் கோவில்மேடு, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம் ஆகிய இடங்களில் தி.மு.க. - தே.மு.தி.க. - த.வெ.க. போஸ்டர்கள் கிழிக்கப்படவில்லை.

ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில் தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்படவில்லை. அவிநாசி ரோட்டில் ரெசிடென்சி ஹோட்டலுக்கு முன்புள்ள துாண்களில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் முழுமையாக கிழிக்கப்படவில்லை.

இதேபோல், கோல்டுவின்ஸ், சின்னியம்பாளையம், நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போஸ்டர்கள் காணப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us