/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிங்க் பஸ்' மூலம் மகளிரை ஏமாற்ற நினைக்காதீர்: வானதி
/
'பிங்க் பஸ்' மூலம் மகளிரை ஏமாற்ற நினைக்காதீர்: வானதி
'பிங்க் பஸ்' மூலம் மகளிரை ஏமாற்ற நினைக்காதீர்: வானதி
'பிங்க் பஸ்' மூலம் மகளிரை ஏமாற்ற நினைக்காதீர்: வானதி
ADDED : செப் 17, 2025 10:26 PM

கோவை; பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, கோவை புலியகுளத்தில் மகளிருக்கான மருத்துவ முகாமை, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று துவக்கி வைத்தார்.
அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சேவை மனப்பான்மையோடு பா.ஜ., செயல்படுகிறது. பிரதமரின் பிறந்த நாள் பரிசாக, இரட்டை இலக்கத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்ட சபையில் இருப்பர். அதற்கான உறுதிமொழியை ஏற்கிறோம்.
'ஒருவர் பச்சை பஸ்ஸில் செல்கிறார்; ஒருவர் மஞ்சள் பஸ்ஸில் செல்கிறார்; கடைசியாக 'பிங்க் பஸ்' ஓவர் டேக் செய்து விடும்' என, துணை முதல்வர் பேசியிருக்கிறார். பிங்க் பஸ் மூலம் மகளிரை ஏமாற்றலாம் என, துணை முதல்வர் நினைக்கிறார்.
பிங்க் பெயின்ட் அடிப்பதால், 'பிங்க் பஸ்' ஆகி விடாது. பெரும்பாலான இடங்களுக்கு, 'பிங்க் பஸ்' வருவதில்லை; பாதியில் நின்று விடுகிறது. பஸ் விட்டு மகளிரை ஏமாற்ற நினைத்தால், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வையும் நடத்துவோம்; நீதிமன்றத்தில் தடையும் வாங்குவோம் என்றால், எதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு; எதற்காக இதுபோன்ற வழக்குகளை தொடர்கின்றனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து முறையாக தேர்வு நடத்த வேண்டும். தி.மு.க., அரசை போலவே, தேர்வும் இருக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.