/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேண்டாம் இன்னொரு குப்பை கிடங்கு அமைச்சரிடம் பொது மக்கள் முறையீடு
/
வேண்டாம் இன்னொரு குப்பை கிடங்கு அமைச்சரிடம் பொது மக்கள் முறையீடு
வேண்டாம் இன்னொரு குப்பை கிடங்கு அமைச்சரிடம் பொது மக்கள் முறையீடு
வேண்டாம் இன்னொரு குப்பை கிடங்கு அமைச்சரிடம் பொது மக்கள் முறையீடு
ADDED : மார் 06, 2024 01:33 AM
கோவை:கவுண்டம்பாளையம் அருகே குப்பை குவிக்கப்படுவதை தவிர்த்து, மாற்று நடவடிக்கை எடுக்குமாறு வீட்டு வசதித்துறை அமைச்சரிடம், அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
மாநகராட்சி மேற்கு மண்டலம், 33வது வார்டு பிரபு நகர் பின்புறம் குப்பை தரம் பிரிப்பு மையம் செயல்படுகிறது. இங்கு மண்டலத்துக்குட்பட்ட, 20 வார்டுகளில் இருந்தும் குப்பை குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு பிரச்னை ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
கடந்த மண்டல கூட்டத்திலும், அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் குப்பை குவிப்பு தொடர்பாக பிரச்னையை கிளப்பினர். இந்நிலையில், கோவைக்கு நேற்று வருகை தந்த, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் கவனத்துக்கு, இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.
கும்பை தரம் பிரிக்கும் இடத்தை பார்வையிட்ட அமைச்சரிடம், 33வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, 34வது வார்டு கவுன்சிலரும், கல்விக்குழு தலைவருமான மாலதி உள்ளிட்டோர், குப்பை கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.
அப்பகுதி மக்களும் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பதாக தெரிவித்தனர். மேலும், இன்னொரு வெள்ளலுார் குப்பை கிடங்கு இங்கு உருவாக வேண்டாம் என புலம்பியதுடன், மாற்று நடவடிக்கை எடுக்கவும், அமைச்சரிடம் முறையிட்டனர். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

