/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவை வீணடிக்காதீங்க பேரணியில் விழிப்புணர்வு
/
உணவை வீணடிக்காதீங்க பேரணியில் விழிப்புணர்வு
ADDED : அக் 26, 2024 11:20 PM

கோவை: நேரு கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான, நேரு தொழில்நுட்ப கல்லுாரி உணவு தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொறியியல் துறையின் சார்பில், உலக உணவு நாள் கொண்டாட்ட பேரணி, ரேஸ் கோர்ஸ் சாலையில் நடந்தது.
நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ''உலகின் பல்வேறு பகுதிகளில், உணவு பஞ்சம் உள்ளது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பருக்கை உணவும், பசியால் வாடுபவர்களுக்குஅமிர்தம் போன்றது. உணவு வீணடிக்கக் கூடாது என்பதை, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து கடைபிடிக்கச் செய்ய வேண்டும்,'' என்றார்.
பேரணியை, இந்தியன் டைரி அசோசியேஷன் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் கண்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன், ஏ1 சிப்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, கல்லுாரி முதல்வர் சிவராஜ், நேரு கல்விக்குழும செயல் இயக்குனர் நாகராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.