/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல் போனில் நேரத்தை செலவிடாதீர்!
/
மொபைல் போனில் நேரத்தை செலவிடாதீர்!
ADDED : ஆக 01, 2025 07:21 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மாணவி சோபனா வரவேற்றார். கல்லுாரி தலைவர் வெங்கடேசன், ஆண்டு மலரை வெளியிட்டார். துணைத் தலைவர் விஜயமோகன் வாழ்த்தி பேசினார்.
கோவை கம்யூனிகேஷன் ஆலோசகர் சனுஜாஜான் பேசுகையில், ''பட்டாம்பூச்சி, பறப்பதற்கு எப்படி சிறிது காலத்தை எடுத்துக் கொள்கிறதோ, அதுபோல மாணவர்கள் பொறுமையுடனும், கவனத்துடனும் செயலாற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தன்னம்பிக்கை நிறைந்தவராக விளங்க வேண்டும். மொபைல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து, தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
இதேபோல, மனநல ஆலோசகர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'வாழ்க்கையானது பல சவால்கள் நிறைந்தது. அதை சமாளித்து செயல்பட வேண்டும். எடுக்கும் முயற்சி தோல்வி அடையலாம். ஆனால், முயற்சிகள் தோற்கக்கூடாது,'' என்றார்.
முடிவில், மாணவி செல்வகாயத்ரி நன்றி கூறினார். கல்லுாரி நிர்வாகத்தினர், இயக்குநர்கள், முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.