ADDED : ஏப் 02, 2025 07:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், 963 மாணவர்கள் படிக்கின்றனர். இதே போல் வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 270 மாணவிகள் படிக்கின்றனர். இந்த இரண்டு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை.
ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தற்போது பயன்படுத்தப்படும் கழிப்பறைகளில் போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. இதனால் கழிப்பிடம் துர்நாற்றம் வீசி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பெண்கள் அதிகளவில் படிக்கும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. மற்றோரு கழிப்பிடத்தில் தண்ணீர் வராததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சில வகுப்பறையில் மின் இணைப்பு வசதி கூட இல்லை. இதனால் மாணவியர் இருளில் அமர்ந்து படிக்கும் அவல நிலை உள்ளது.

