/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வீடு வீடாக அழைப்பு
/
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வீடு வீடாக அழைப்பு
ADDED : ஜூலை 28, 2025 09:24 PM
அன்னுார்; சத்தியில் இன்று (29ம் தேதி) நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், இன்று (29ம் தேதி) காலை 10:00 மணிக்கு சத்தி பஸ்ஸ்டாண்ட் முன் கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், பசுமை புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும், என வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அன்னுார், கெம்பநாயக்கன்பாளையம், சாலையூர், கதவுகரை, கொண்டையம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், வீடுகள்மற்றும் தோட்டங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அன்னுார் மற்றும்எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் இருந்து அதிகஅளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.