தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிளக்ஸ், கட்சி கொடிகளை அகற்றாததால்... வார்னிங்!   அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் எச்சரிக்கை

பிளக்ஸ், கட்சி கொடிகளை அகற்றாததால்... வார்னிங்!   அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் எச்சரிக்கை

பிளக்ஸ், கட்சி கொடிகளை அகற்றாததால்... வார்னிங்!   அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் எச்சரிக்கை


UPDATED : செப் 25, 2026 05:24 AM

ADDED : செப் 24, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 05:24 AM ADDED : செப் 24, 2026 04:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பிளக்ஸ், கட்சி கொடி அகற்றுவதில், அசம்பாவிதம் நடந்தால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா; கூட்டம் மட்டும் மாதம் மாதம் நடக்கிறது, நடவடிக்கை இல்லை; இனி, இதுபோன்று இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஆலோசனை கூட்டத்தில் சப் - கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். பொள்ளாச்சி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், அனுமதி பெறாமல் வைக்கப்படும் பிளக்ஸ்கள், நீண்ட நாட்களுக்கு எடுக்கப்படாமல் உள்ளன. மேலும், கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரும் போது, அரசியல் கட்சியினர் அவர்களை வரவேற்க கொடிகளை அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் கட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது.

கொடி கம்பங்கள், பேனர்கள் வைக்க விதிமுறைகள் வகுத்தது பற்றி, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை சப் - கலெக்டர் வழங்கினார். ஆனால், விதி மீறி பிளக்ஸ் வைக்கும் கலாசாரம் தொடர்கிறது. அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விழாக்களின் போது கொடி கட்டுவதற்கான அனுமதியும் பெறுவதில்லை, கட்டணமும் செலுத்துவதில்லை. அதிகாரிகள் உத்தரவுகளை பின்பற்றாமல், அலட்சியமாக உள்ளனர், என புகார் எழுந்தது.

இந்நிலையில், நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்புகள் மற்றும் பிளக்ஸ் அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுதேவன், நெடுஞ்சாலைத்துறை, போலீஸ், ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி பேசியதாவது:

பொள்ளாச்சி நகரப்பகுதியில் அரசு அலுவலகங்களை மறைத்தும், ரோட்டை ஆக்கிரமித்தும் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. பல முறை அறிவுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கொடிகள் கட்டுவதற்கு அனுமதி பெற்று, ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். அனுமதியின்றி கொடிகள் கட்டியதற்கு அபராதம் வசூலிக்க வேண்டும். ஆனால், எவ்வித கட்டணமும், அபராதமும் வசூலிக்கவில்லை.

இதுவரை எங்கும் விழாக்கள் நடக்கவில்லையா; அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகள் நடக்கவில்லையா? மூன்று மாதமாக கூட்டம் நடத்தி கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியும் பயன் இல்லை.

ரோடுகளை சேதப்படுத்தி கொடிகள் நடப்பட்டாலும் அபராதம் விதிப்பது, கட்டணம் வசூலிப்பது இல்லை. விதிமுறை மீறப்படுகிறது. சென்னை போன்று விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்ட பின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா; ஏன் தயக்கம் என விளக்கமளிக்க வேண்டும்.

விதிமுறை மீறுவோர் மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டும். இனியும் அதிகாரிகள் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கூட்டத்தில் உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

அதே போன்று, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்தடுத்த கூட்டங்களில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில், விதிமீறல்களை குறிப்பிட்டு, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை சுட்டிக்காட்டி, சப்-கலெக்டர் எச்சரிக்கை விடுத்ததால், அதிகாரிகள் வெலவெலத்து போயினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us