/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜிம்னாஸ்டிக்கில் இரட்டை தங்கம்
/
ஜிம்னாஸ்டிக்கில் இரட்டை தங்கம்
ADDED : ஆக 27, 2025 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில், மாநில அளவிலான 'ஜிம்னாஸ்டிக் ஏரோபிக்ஸ் சாம்பியன்ஷிப்' போட்டி, சென்னையில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவர்களுக்கான சீனியர் பிரிவில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி பி.பி.ஏ. இரண்டாமாண்டு மாணவர் மோனிஷ், தனிநபர் மற்றும் கலப்புப் பிரிவுகளில் இரட்டை தங்கம் வென்றார்.
கடந்தாண்டு காஷ்மீரில் நடந்த ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவர் தங்கம் வென்றுள்ளார். அவரை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.