/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைரேகை கருவி பழுது; எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
/
கைரேகை கருவி பழுது; எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
ADDED : ஆக 27, 2025 10:36 PM
கோவை; கோவை தெற்கு தொகுதியில், 80வது வார்டு, செட்டி வீதி, அசோக் நகரில் உள்ள ரேஷன் கடையில் கைரேகை கருவி அடிக்கடி பழுதடைவதால், ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேரில் சென்று, கடை ஊழியர் ஸ்ரீதேவியிடம் விசாரித்தார்.
'கடந்த சனிக்கிழமை கைரேகை பதிவு செய்யும் கருவி பழுதானது; சரிசெய்ய கொடுத்திருக்கிறோம். கருவிழி பதிவு கருவி வாயிலாக, ரேஷன் பொருட்கள் வழங்குகிறோம்' என, கடை ஊழியர் கூறினார். கருவிழி கருவி மூலம் ஒருவருக்கு பதிவு செய்யச் சொல்லி, பொருட்கள் வழங்கப்படுகிறதா என எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.
பொருட்களின் தரத்தை சோதித்து பார்த்தார். ஒவ்வொரு மாதமும் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என, அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்தார்.