/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன தயாரிப்பு போட்டியில் இந்துஸ்தானுக்கு டபுள் வெற்றி
/
வாகன தயாரிப்பு போட்டியில் இந்துஸ்தானுக்கு டபுள் வெற்றி
வாகன தயாரிப்பு போட்டியில் இந்துஸ்தானுக்கு டபுள் வெற்றி
வாகன தயாரிப்பு போட்டியில் இந்துஸ்தானுக்கு டபுள் வெற்றி
ADDED : ஜன 31, 2024 11:57 PM

கோவை : இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், 'எபிசைக்கிள்' எனும் வாகன போட்டியில், அட்வான்ஸ்டு மற்றும் குவாட் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகிய, இரண்டு பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
போட்டியில், புதுமையான எலக்ட்ரிக் பெடல் ஹைபிரிட் டூ சீட்டர் வாகனத்தை உருவாக்கியிருந்தனர். இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரியின் மற்றொரு மாணவர் குழு, மஹிந்திரா தார் அமைப்பின் குவாட் வகை மின்சார ஒற்றை இருக்கை வாகனத்தை வடிவமைத்து, வெற்றி பெற்றது.
மாணவர்களின் கண்டுபிடிப்பு, சிறந்த வணிகத் திட்டம் மற்றும் கண்டுபிடிப்பு மதிப்புமிக்கது என பல விருதுகளைப் பெற்றது. நிகழ்வின் இணை அமைப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் நிறுவனத்தில், வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.
கல்லுாரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக அறங்காவலர் பிரியா, முதன்மை நிர்வாக அலுவலர் கருணாகரன், முதல்வர் ஜெயா, பேராசிரியர் ராஸ் மேத்யூ மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.