/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையங்களில் டி.பி.டி., தடுப்பூசி தட்டுப்பாடு வெள்ளி முதல்தான் கிடைக்குமாம்
/
சுகாதார நிலையங்களில் டி.பி.டி., தடுப்பூசி தட்டுப்பாடு வெள்ளி முதல்தான் கிடைக்குமாம்
சுகாதார நிலையங்களில் டி.பி.டி., தடுப்பூசி தட்டுப்பாடு வெள்ளி முதல்தான் கிடைக்குமாம்
சுகாதார நிலையங்களில் டி.பி.டி., தடுப்பூசி தட்டுப்பாடு வெள்ளி முதல்தான் கிடைக்குமாம்
ADDED : அக் 02, 2024 02:05 AM
கோவை : டி.பி.டி., தடுப்பூசி, கோவையில் கடந்த சில நாட்களாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இருப்பு இல்லை. அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் செலுத்தப்பட்டு வந்த டி.பி.டி., தடுப்பூசியும் நிறுத்தப்பட்டது.
குழந்தையின் உயிருக்கு சில வேளைகளில், ஆபத்தை ஏற்படுத்தும் தொண்டை அடைப்பான், டெட்டனல், கக்குவான் இருமல் நோய்களை தடுப்பதற்காக, முத்தடுப்பூசி எனப்படும் இந்த டி.பி.டி., தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசி குழந்தைக்கு ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம், அதோடு ஒன்றரை வயதிலும், ஐந்து வயதிலும் செலுத்த வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் இந்த தடுப்பூசி, மூன்று மாதங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தட்டுப்பாடு காரணமாக, தாய்மார்களை சுகாதார நிலையங்களுக்கோ, அரசு மருத்துவமனைக்கோ செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், 'டி.பி.டி., தடுப்பூசிக்கு மாநிலம் முழுவதும் தட்டுப்பாடு உள்ளது.
தேவையாக இடங்களுக்கு சுழற்சி முறையில் அனுப்பப்படுகிறது. ஒரு மருந்து குப்பியில், 10 பேருக்கு செலுத்தலாம். தேவைப்படும் இடத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மீதம் உள்ள குப்பி பத்திரபடுத்தி செலுத்தப்பட்டு வருகிறது' என்றார்.
மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறுகையில், “டி.பி.டி., தடுப்பூசி, அரசிடம் இருந்து கேட்டு பெறப்பட்டுள்ளது. தட்டுப்பாடு நீங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் தேவையான இடங்களுக்கு அனுப்பி, குழந்தைகளுக்கு தொடர்ந்து செலுத்தப்படும்,” என்றார்.

