/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரியில் கலை, இலக்கிய போட்டிகள்
/
டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரியில் கலை, இலக்கிய போட்டிகள்
டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரியில் கலை, இலக்கிய போட்டிகள்
டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரியில் கலை, இலக்கிய போட்டிகள்
ADDED : ஆக 31, 2025 11:32 PM

கோவை; டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கலை இலக்கியப்போட்டிகள் நடந்தன. கல்விக்குழுமங்களின் இயக்குனர் முத்துசாமி தலைமை வகித்து, போட்டிகளை துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லுாரிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பேச்சு, கட்டுரை, கவிதை, மனனம் போன்ற போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சரவணன், ராமலிங்கர் பணிமன்றத்தின் பொறுப்பாளர் பாலசுப்ரமணியன், என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.