/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
/
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
ADDED : டிச 19, 2025 05:01 AM
கோவை, டிச. 19-
கோவை மாவட்டத்தின் 10 சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாலை 3 மணிக்கு கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பவன்குமார் வெளியிடுகிறார்.
ஜனவரியில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 6,45,039 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 20 சதவீதம் வரை பெயர்கள் நீக்கப்பட்டதற்கு கொரோனா இறப்பும் ஒரு காரணம்.
இன்று வெளியாகும் பட்டியலில் 25,80,159 பெயர்கள் இருக்கும். நாளை முதல் ஜன.15 வரை, பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, ஆட்சேபிக்க விண்ணப்பிக்கலாம். பிப்.16 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
இன்று வெளியாகும் பட்டியல் 3,678 பக்கங்கள் கொண்டது என அதிகாரிகள் கூறினர். https://www.elections.tn.gov.in/ என்ற இணைய முகவரியிலும் https://coimbatore.nic.in/ என்ற வெப்சைட்டிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

