ADDED : டிச 19, 2025 05:01 AM
'இ தயத்தின் மேல் பரப்பில் உள்ள அறைகளில் பாதிப்பு ஏற்படும்போது, சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னை ஏற்படுகிறது. கே.எம்.சி.எச்.ல் துவக்கப்பட்டுள்ள நவீன சிகிச்சை மையத்தில் இதற்கு உரிய சிகிச்சை அளிக்கிறோம்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை இதயத்துடிப்பு பிரிவு சிறப்பு மருத்துவர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
இதயத்தில் ஏற்படும் மின் துாண்டல் காரணமாகவே இதயம் இயல்பாக சுருங்கி விரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சுகிறது. இந்த மின் துாண்டல் ஒழுங்கற்ற முறையில் தவறுதலாக வந்தால், இதயத்தின் மேல் அறைகள் சீரற்று சுருங்கும்.
இதயத்தின் மேல் பரப்பில் உள்ள அறைகளும், கீழ் பரப்பில் உள்ள அறைகளும் ஒருவித ஒழுங்குடன் இணைந்து இயங்குகின்றன. மேல் அறைகள் சீரற்று இயங்கும் போது, இந்த ஒழுங்கு பாதிக்கப்படுகிறது; சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது.
இது ரத்த ஓட்டத்தை பாதிப்பு ரத்தக்கட்டிகள் ஏற்பட வழி வகுக்கும். பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் காலப்போக்கில் இதயத்தை பலவீனமாக்கிவிடும்; இதய செயலிழப்பு ஏற்படும்.
அடிக்கடி இதயம் வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் இருந்தால், அது சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
பிறக்கும்போதே இதயத்தில் ஏற்படும் குறைபாடு, மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், இதய வால்வுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது பழக்கம், அதிக உடல் பருமன் முறையான உடற்பயிற்சி இல்லாதது, சரியான துாக்கமின்மை போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
கே.எம்.சி.எச்.ல் இந்த பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நவீன சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, 87548 -87568 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
