தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அடையாள அட்டை புதுப்பிக்க இழுபறி

அடையாள அட்டை புதுப்பிக்க இழுபறி

அடையாள அட்டை புதுப்பிக்க இழுபறி


UPDATED : நவ 18, 2026 08:24 PM

ADDED : நவ 18, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 08:24 PM ADDED : நவ 18, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: குடிமங்கலம் ஒன்றியத்தில், வேலை உறுதி திட்டத்தில் தனிநபர் வேலைக்கான அடையாள அட்டை புதுப்பித்தல் இழுபறியாக நடப்பதால், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள, 23 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

திட்ட பணி செய்யும் தொழிலாளர்களுக்கு அரசால், அவர்களது புகைப்படத்துடன் கூடிய தனிநபர் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில், தொழிலாளர்களின் முழு விபரங்களும் இடம் பெற்றிருக்கும்.

மேலும், அவர்களது வேலைக்கான வருகையும் அதில் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த அடையாள அட்டையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

இதற்காக தொழிலாளர்கள் தங்கள் அட்டையை சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாக, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்கின்றனர். ஆனால், ஒன்றிய அலுவலகத்தில் அட்டையை புதுப்பித்து வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.

உதாரணமாக விருகல்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த தொழிலாளர்கள் அட்டையை புதுப்பிக்க முடியாததால், திட்டத்தில் வேலை கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இழுபறி இல்லாமல், அடையாள அட்டையை புதுப்பித்து உடனடியாக வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us