/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
56வது வார்டில் வடிகால் சரிந்து விழுந்தது; ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ADDED : மே 15, 2025 11:37 PM

கோவை; கோவை மாநகராட்சி, 56வது வார்டு நேரு நகரில், குடிநீர் வேன் சென்றபோது, அழுத்தம் தாங்காமல், புதிதாக கட்டப்பட்ட மழை நீர் வடிகால் சரிந்து விழுந்தது.
கோவை மாநகராட்சி, 56வது வார்டில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இச்சூழலில், மழை நீர் வடிகால் கட்டுவது, தார் சாலை போடுவது, பாதாள சாக்கடைக்கு தோண்டிய இடங்களில் சாலை பராமரிப்புக்காக, ஒரு கோடியே, 26 லட்சம் ரூபாயில் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.
ஒண்டிப்புதுாரில் இருந்து இருகூர் செல்லும் ரோட்டில் நேரு நகர் பகுதியில் ரோட்டோரத்தில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. நேற்று மாலை அப்பகுதியில் அரை மணி நேரம் கன மழை பெய்தது.
அச்சமயத்தில் குடிநீர் வேன் ஒன்று அவ்வழியாக வந்தது. வண்டி ஒதுங்கியபோது, அழுத்தம் தாங்காமல், புதிதாக கட்டப்பட்ட மழை நீர் வடிகால் சரிந்து விழுந்தது. இது, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, பணியை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒப்பந்ததாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.