/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடிகால் அமைக்கும் பணி பாதியில் முடக்கம்: பழனி கிருஷ்ணா அவென்யூ மக்கள் அச்சம்
/
வடிகால் அமைக்கும் பணி பாதியில் முடக்கம்: பழனி கிருஷ்ணா அவென்யூ மக்கள் அச்சம்
வடிகால் அமைக்கும் பணி பாதியில் முடக்கம்: பழனி கிருஷ்ணா அவென்யூ மக்கள் அச்சம்
வடிகால் அமைக்கும் பணி பாதியில் முடக்கம்: பழனி கிருஷ்ணா அவென்யூ மக்கள் அச்சம்
ADDED : அக் 29, 2025 12:32 AM

அன்னுார்: மழை நீர் வடிந்து செல்ல வடிகால் அமைக்கும் பணி பாதியில் முடங்கியதால் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அன்னுாரில் கடந்த 18ம் தேதி நள்ளிரவு கனமழை பெய்தது. இந்த மழையால் அன்னுாரில் சத்தி சாலையில் பழனி கிருஷ்ணா அவென்யூ, புவனேஸ்வரி நகர் மற்றும் தோட்டங்களுக்குள் மழை நீர் புகுந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு அதிக சக்தி உள்ள ஐந்து மின் மோட்டார்கள் நிறுவப்பட்டு, பழனி கிருஷ்ணா அவென்யூவில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது.
எனினும் புவனேஸ்வரி நகர் மற்றும் தர்மர் கோயில் வீதியில் வீடுகளை சுற்றி மழை நீர் இன்னும் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சத்தி ரோட்டில் துவங்கி தாச பாளையம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லே-அவுட் வரை வடிகால் அமைப்பது, பின்னர் இட்டேரி வீதியில் மழைநீர் வடிகாலுடன் இணைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூன்று நாட்களாக காலை முதல் இரவு வரை வடிகால் வெட்டும் பணியில் ஈடுபட்டது. அதன் பிறகு கடந்த மூன்று நாட்களாக எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இதுகுறித்து பழனி கிருஷ்ணா அவென்யூ மற்றும் புவனேஸ்வரி நகர் மக்கள் கூறுகையில், 'மழை தொடரும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மழைநீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வெட்டும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெறவில்லை. தொடர்ந்து இட்டேரி வீதி வரை மழைநீர் வடிகால் வெட்ட வேண்டும். பணியை மீண்டும் துவக்க வேண்டும்,' என்றனர்.

