/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய, மாநில அளவில் விளையாட மாணவ, மாணவியர் தேர்வு
/
தேசிய, மாநில அளவில் விளையாட மாணவ, மாணவியர் தேர்வு
ADDED : அக் 29, 2025 12:28 AM
மேட்டுப்பாளையம்: தேசிய சைக்கிளிங் போட்டி, மாநில குத்து சண்டை போட்டிக்கு, காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவிகள் தீக்ஷிகா, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரிணி முதலிடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்.டி.எஸ்., மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு சைக்கிள் சங்கம் நடத்தும் மாநில சைக்கிளிங் ஷிப் 2025 திருப்போரூரில் நடைபெற உள்ளது. இதில் விளையாட இப்பள்ளியை சேர்ந்த சாதனா ஸ்ரீ, நவீனா ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும், மாநில ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தீக்ஷிகா, நவீனா, சாதனா, வினிஷ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
எஸ்.ஜி. எப்.ஐ., தேசிய ரோடு மற்றும் ட்ராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இப்பள்ளி மாணவி தீக்ஷிகா, சாதனா, சக்திகா ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாநில குத்துச் சண்டை போட்டிக்கு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, இப்பள்ளி மாணவன் பிரகலாதன் தேர்வு பெற்றுள்ளார்.
மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட தேர்வு பெற்றுள்ள மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலர் ஜெயகண்ணன், முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சக மாணவியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

