UPDATED : அக் 15, 2026 06:11 PM
ADDED : அக் 15, 2026 06:06 PM
கருமத்தம்பட்டி: வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில், கருமத்தம்பட்டி நகராட்சியில் கால்வாய்கள், வடிகால்கள் துார்வாரும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
கருமத்தம்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வடகிழக்கு பருவ மழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில், சாக்கடை கால்வாய்கள் துார் வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாரதியார் நகர், கிருஷ்ணாபுரத்தில் உள்ள குட்டை துார்வாரும் பணியும், மழை நீர் தடையின்றி செல்லும் வகையில், வடிகால்கள் துார் வாரும் பணியும் நடக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வழக்கமாக உள்ள நீர் வழிப்பாதைகள் மற்றும் வடிகால்களும் துார் வாரப்படுகின்றன. இப்பணிகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
