/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும்
/
சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும்
சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும்
சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும்
ADDED : அக் 14, 2024 11:29 PM

மேட்டுப்பாளையம் : நகராட்சி 3வது வார்டில், சாக்கடைகளை சுத்தம் செய்யாததால், குப்பைகள் அடைத்து, கழிவுநீர் தேங்கி உள்ளது. கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் நகராட்சி, மூன்றாவது வார்டு கவுன்சிலராக தி.மு.க.,வை சேர்ந்த உமாமகேஸ்வரி உள்ளார். இந்த வார்டில் வ.உ.சி., வீதி, பண்ணாரி அம்மன் கோவில் வீதி, அப்பாநாயக்கர் தெரு, போலீஸ் குடியிருப்பு பகுதி என பத்துக்கு மேற்பட்ட வீதிகள் உள்ளன. இந்த வார்டில் குடியிருப்புகள் அதிகமாகவும், வீதிகளின் பாதைகள் குறுகலாகவும் உள்ளன. மேட்டுப்பாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், அண்ணாஜி ராவ் சாலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளின் கழிவுநீர், கண்ணப்பன் லே அவுட், அப்பாநாயக்கர் தெரு வழியாக, பவானி ஆற்றில் கலக்கிறது. ஒட்டு மொத்த கழிவுநீரும், எம்.எஸ்.ஆர்.,புரம், அப்பா நாயக்கர் தெருக்களின் குடியிருப்புகள் வழியாக செல்கின்றன.
இரண்டு குடியிருப்பு பகுதிகளின் வழியாகச் செல்லும் இந்த சாக்கடை, பெரிய அளவில் உள்ளது. ஆனால் சாக்கடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, பல இடங்களில் வீடுகள் கட்டி உள்ளனர். மேலும், மக்கள் குப்பைகளை சாக்கடையில் கொட்டி வருகின்றனர். அதனால் சாக்கடையில் கழிவுநீர் செல்ல, வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து நகராட்சி மூன்றாவது வார்டு மக்கள் கூறியதாவது:
இந்த வார்டில், வ.உ.சி., நகரில் உள்ள வீதிகளுக்கும், பண்ணாரி மாரியம்மன் கோவில் குறுக்கு சந்து முதல் குப்பம் வரை சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். மேலும் அப்பா நாயக்கர் தெரு வழியாகச் செல்லும் சாக்கடையில், கழிவுநீர் தேங்கி இருப்பதால், அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மண் சாலை உள்பட, வார்டில் உள்ள மண் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலைகளுக்கு சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். வார்டில் உள்ள சாக்கடைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

