/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோனியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
/
கோனியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
கோனியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
கோனியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
ADDED : டிச 03, 2025 07:23 AM

கோவை: கோவையின் காவல்தெய்வமாக போற்றப்படும் கோனியம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, அறநிலையத்துறை ஆடைக்கட்டுப்பாடு விதித்துள்ளது.
விழாக்காலங்களில் இக்கோயிலுக்கு, ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வருகை தருவர்.சமீபகாலமாக இக்கோயிலுக்கு வெளி நாட்டவர்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.
ஒரு சிலர் அரைக்கால் டவுசர் அணிந்து வருவதால், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். இந்நிலையை மாற்ற, அறநிலையத்துறை சார்பில் கோயிலில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில்ஆண்கள் வேட்டி, சட்டை, பேன்ட்ஸ் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்தும் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.